Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சென்னையில் புதிதாக பரவும் எலக்ட்ரிக் … அதிர்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் ..!!

சென்னையில் புதிய மகேந்திர நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் , அதைக் கருத்திற்கொண்டு பல்வேறு நகரங்கள் மற்றும் தலைநகர் பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ,  மஹிந்திரா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு புதிய ஆட்டோக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோக்களுக்கு ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என பெயரிடப்பட்டுள்ளது .

Image result for electric auto chennai

 

மேலும் ,  இந்த ஆட்டோ ஐ.பி.67 தொழில்நுட்ப வகையில் தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்கக்கூடிய வகையிலான பேட்டரிகளை கொண்டுள்ளது . இவை லித்தியம் அயன் ரக பேட்டரிகள் ஆகும். இந்த ஆட்டோ அதிகபட்சமாக 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் ,  இந்த ட்ரியோ ஆட்டோ 30 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்துகிறது .

Image result for electric auto chennai

இதன் காரணமாக, ஆட்டோ நிறுவனம் பழைய பெட்ரோல் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றுவதற்காக திட்டமிட்டுள்ளது . இந்த  எலக்ட்ரிக் ஆட்டோக்கள் தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . மேலும் பெட்ரோல் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோக்களாக மாற்ற   ரூ. 1½ லட்சம் செலவாகும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் .

Categories

Tech |