Categories
மாநில செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 279.21 கோடி திட்ட மதிப்பில் புதிய திட்டங்கள்…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். இங்கு முதல்வர் பெரம்பலூர் மாவட்டத்திற்கான 23 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதற்கான திட்ட மதிப்பீடு 221.80 கோடி ரூபாயாகும். இதனையடுத்து முதல்வர் 54 புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். இதற்காக 31.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9621 பயனாளிகளுக்கு 26.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் முடிற்ற 23 திட்ட பணிகளை தொடங்கி வைத்த நிலையில் அது என்னென்ன பணிகள் என்ற விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்ட புதிய சாலைகள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள், கழிவறைகள் போன்ற கட்டிடங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்புகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட புற நோயாளிகள் பிரிவு, ஊரக நல்வாழ்வு மையம் போன்றவைகள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

இதனையடுத்து கூட்டுறவு துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கட்டப்பட்ட 10 புதிய அலுவலக கட்டிடங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட மாணவியர் விடுதி மற்றும் வகுப்பறைகள், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட சாலைகள் மற்றும் சிறுபாலம் போன்றவைகள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. மேலும் இது தவிர பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Categories

Tech |