Categories
தேசிய செய்திகள்

மே 25 முதல் தொடங்கவுள்ள உள்நாட்டு விமான போக்குவரத்திற்கான புதிய நெறிமுறைகள் வெளியீடு!

நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் உள்ளூர் விமானப் பயணத்திற்கு புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளார். அதில்,

  • கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி கிடையாது.
  • இருமல், காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் அமர விமானத்தில் தனி இடத்தில் இருக்கும்.
  • பயணிகள் அனைவரும் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்து விட வேண்டும்.
  • உடன் எடுத்து வரும் 2 பைகளை தவிர வேறு சுமைகள் எடுத்து வரக்கூடாது.
  • அனைத்து பயணிகளும் தங்களது போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
  • பயணிகள் தெரிவிக்கும் சுய தகவல் அல்லது ஆரோக்கிய சேது செயலி தரவு அடிப்படையில் பயண அனுமதி வழங்கப்படும்.
  • ஆரோக்கிய சேது செயலியின் நிலை சிவப்பு நிறமாக இருந்தால் பயணம் செய்ய அனுமதி இல்லை.
  • பயணிகள் விமானத்தில் உட்கொள்ள தாங்களே உணவை கொண்டு வர வேண்டும்.
  • விமானங்கள் வந்த உடனும் புறப்பட்ட பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • பயணிகள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
  • விமானங்களில் நடு இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
  • கை சுத்திகரிப்பு திரவம் கொண்டு வர வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |