Categories
டெக்னாலஜி பல்சுவை

“புதிய பிவிசி ஆதார் அட்டை”…. வீட்டிலிருந்தபடியே எப்படி ஆர்டர் செய்வது…. எளிய வழிமுறை… உங்களுக்காக இதோ..!!

நாம் நம் வீட்டில் இருந்து கொண்டே பிவிசி ஆதார் அட்டையை எவ்வாறு பெறுவது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம்.

ஆதார் அட்டை என்பது பல்வேறு அரசு மற்றும் தனியார் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. பல்வேறு இடங்களில் ஆதார் கட்டாயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எப்போதுமே ஆதார் அட்டையை பல்வேறு காரணங்களால் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தனித்துவமான அடையாளம் ஆணையம் இந்த புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஆதார் பிவிசி அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

ஏனெனில் இதனை எளிதாக பர்ஸில் வைத்துக்கொள்ள முடியும். உங்கள் முழுக் குடும்பத்திற்கும் ஆன்லைனில் ஆதார் பிவிசி கார்டு ஈஸியாக பெற முடியும்.அதற்கான கட்டணம் 50 ரூபாய் மட்டுமே. அதனை செலுத்தி நீங்கள் பிவிசி கார்டை ஆர்டர் செய்யலாம். அது எப்படி ஆர்டர் செய்வது என்பதை இதில் பார்ப்போம்.

எப்படி செய்வது : 

முதலில் நீங்கள் யுஐடிஏஐ அதிகாரபூர்வ வலை தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு மை ஆதார் செக்ஷன் என்ற பிரிவுக்குள் சென்று Order Aadhaar PVC Card’’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் ஐடியை உள்ளிட வேண்டும். பின்னர் security code or captcha code குறியீட்டை உள்ளிடவும். பின்னர் ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெறப்படும்.

 பிவிசி அட்டையின் நன்மைகள்:

இந்த ஆட்டை நீண்ட காலம் நீடிக்கும்.

இதனை பர்ஸில்  மிக சுலபமாக வைத்துக்கொள்ள முடியும்.

இது எந்த இடத்திலும் சேதம் ஆகாது. இந்த அட்டையை நல்ல பிவிசி தரம் மற்றும் லேமினேஷன் உடன் வருகிறது.

ஆதார் பி.வி.சி கார்டில் ஹாலோகிராம், கில்லோச் முறை, கோஸ்ட் இமேஜ் மற்றும் மைக்ரோடெக்ஸ்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

இதில் உள்ள , QR குறியீடு மூலம் ஆஃப்லைன் சரிபார்ப்பு உடனடியாக செய்யப்படுகிறது.

Categories

Tech |