ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடல் பகுதியில் ரசாயன கலவைகளால் கடலின் நிறம் மாறி காட்சியளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பாம்பன் கடலில் தற்போது புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இயந்திரம் மற்றும் பொக்லைன் மூலம் பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது.
இதனையடுத்து கடலில் தோண்டப்படும் மண் மற்றும் ரசாயன கலவைகள் கடல் நீரில் கலப்பதால் கடலின் நிறம் மாறி காட்சியளித்துள்ளது. ரசாயன கலவைகளினால் தான் இந்த மாற்றம் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.