Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரிப்பு… இ-சேவை மைய அதிகாரிகள் தகவல்..!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக இ சேவை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் அவர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதில் முதற்கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கான டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வர் கொரோனா நிவாரண நிதியை வழங்கி உள்ளதால் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாதம் சராசரியாக 5000 கார்டுகளுக்கு விண்ணப்பம் வருவதாக இ சேவை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |