சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் ட்ரைலர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ”மாநாடு” என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தீபாவளியில் வெளியாக உள்ள நிலையில், STR இன் மாநாடு திரைப்படமும் வெளியாகின்றது.
சமீபத்தில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில், யூடியூபில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இதனால், அவரது ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.