Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சாதனை படைத்த “பிகில்” பட பாடல்…. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

பிகில் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த “சிங்கப் பெண்ணே” பாடல் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2019ஆம் ஆண்டு முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு பிகில் படம் எடுக்கப்பட்டு இருந்தது.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் விவேக், யோகி பாபு, இந்துஜா, அமிர்தா ஐயர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 300 கோடி வசூல் சாதனை செய்து அந்த ஆண்டிற்கான அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை பெற்றது.

பிகில் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த “சிங்கப்பெண்ணே” வீடியோ பாடல் யூடுயூபில் பதிவிடப்பட்டது. அது தற்போது 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் தங்களது இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |