Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் புதிய கட்டுப்பாடுகள்… பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா… வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்ஸ் பாராளுமன்றத்தில் காபேக்கள் மற்றும் உணவகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கும் மசோதா சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகின்ற ஜூலை 21-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்திருந்தார். மேலும் காபேக்கள் மற்றும் உணவகங்களில் pass sanitaire கட்டாயமாக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் பாராளுமன்றத்தில் காபேக்கள் மற்றும் உணவகங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் pass sanitaire சான்றிதழ் இருந்தால் மட்டுமே உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்கப்படும்.

அதனை மீறினால் 45,000 யூரோ அபராதத்துடன் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஜூலை 19-ஆம் தேதி இந்த மசோதா பாதுகாப்பு கவுன்சில் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பாராளுமன்றத்தில் ஜூலை 21-ஆம் தேதி இது குறித்து விவாதிக்கப்பட்ட பின்பு இந்த புதிய சட்டம் ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காபேக்கள், உணவகங்கள் மிகவும் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |