Categories
மாநில செய்திகள்

ஆன்-லைன் வகுப்பு நடத்த புதிய விதிமுறைகள் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் ஆன்-லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பில் சில தேர்வுகளும் மட்டும் நடைபெற்றுள்ள நிலையில் 10ம்வகுப்பு உள்ளிட்ட மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு தற்போது வரை முடிவு எடுக்கவில்லை.

இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் என்பதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எல்கேஜி முதல் வகுப்புகள் தொடங்க இருப்பதால் சிறுவயதிலே ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறை ஏற்படுத்தும் என்றும் இணையதள விளம்பரங்களால் மாணவர்களுக்கு கவனசிதறல் ஏற்படும்.

கிராமப்புற மாணவர்களுக்கு இணையவசதி, லேப்டாப் போன்றவை சரியாக உள்ளதாக நிலையில் அவர்களுக்கு இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆன்-லைன் வகுப்புகளை முறை பள்ளிக்கல்வித்துறைப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒப்புதல் பெற்று அரசாணை வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |