Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது..! சுகாதாரத்துறை புதிய திட்டம்… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

ஜெர்மன் சுகாதாரத்துறை அந்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மன் சுகாதாரத்துறை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடாமல் ஜெர்மனிக்கு வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருகிறார்களா என்பதை விட தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை ஜெர்மனிக்கு விமானம் மூலம் வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை கட்டாயம் என கூறப்பட்டிருந்தது. கார் அல்லது ரயில் என எந்த வாகனங்கள் மூலம் ஜெர்மனிக்குள் வந்தாலும் புதிய விதிகளின்படி கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று கூறப்படுகிறது. மேலும் 2 டேஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக போட்டு கொண்டவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |