திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்து வந்த வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு பிறகு திமுக இளைஞரணி மாநில செயலாளராக இருந்து வந்த அவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு திமுக_வின் புதிய இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார்.இந்நிலையில் இளைஞரணி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் உறுப்பினராக அவர் சேர்க்கப்பட்டார். 20 பேருக்கும் குறைவாக இருக்கும் அந்த பொறுப்பு அதிகாரமிக்கதாக பார்க்கப்படுகின்றது.கலைஞர் மறைவுக்கு பின் கூட்டப்பட்ட முதல் கூட்டம் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தான். கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்படாத காலகட்டத்தில் கூடும் முக்கியமான குழுவாக இது பார்க்கப்படுகின்றது.இதற்கான அறிவிப்பையும் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.