Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 8 முதல் அமலுக்கு வருகிறது..! பிரான்ஸ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்… பிரபல நாடு முக்கிய அறிவிப்பு..!!

பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவிற்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் என்ன காரணத்திற்காக பிரித்தானியாவிற்கு வந்துள்ளார்கள் என்பது குறித்த தகவலை படிவத்தில் நிரப்ப வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை. அதேபோல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட பெரியவர்களுடன் பயணிக்கும் பட்சத்தில் சிறுவர்களும் தடுப்பூசி பெற்றதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் அவர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என்றால் என்ன காரணத்திற்காக பிரித்தானியாவிற்கு வந்துள்ளார்கள் என்பது குறித்த தகவலை படிவத்தில் கட்டாயம் நிரப்ப வேண்டும்.

மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பிரான்சிலிருந்து பிரித்தானியா வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு UK passenger locator form என்ற படிவத்தை நிரப்புவது அவசியம். அதேசமயம் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் குறித்த விவரங்களையும் பெற்றோர்களின் படிவத்திலேயே நிரப்பிக் கொள்ளலாம். மேலும் வருகின்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |