Categories
தேசிய செய்திகள்

UPI பண பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்?… தேசிய கட்டண கழகத்தின் அதிரடி முடிவு….!?!

உலகம் முழுவதும் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் வங்கிகளுக்கு செல்வதற்கு பதில்  யுபிஐ செயலிகள் மூலமாகவே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்த முறை சுலபமாக இருப்பதால் பல கோடி பேர் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் தேசிய கட்டண கழகத்தின் தரவுகளின் படி கடந்த செப்டம்பர் மாதத்தில் போன்பே மற்றும் ஜி பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் 11 லட்சம் கோடி அளவிற்கு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.

இதன் காரணமாக யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த தேசிய கட்டண கழகம் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு ஒருவர் யுபிஐ மூலம் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பண பரிவர்த்தனை செய்தல், ஒரு நபர் paytm, போன்பே, ஜிபே போன்ற செயலிகள் மூலம் ஒரு நாளைக்கு 20 முறை மட்டுமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட இருக்கிறது.

அதோடு கனரா வங்கிகள் போன்ற சிறிய வங்கிகள் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பண பரிவர்த்தனைகள் செய்து கொள்ள அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது பெரிய வங்கிகள் மற்றும் சிறிய வங்கிகள் என வங்கிகளை பொறுத்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் இந்த வருடம் இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |