ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஓராண்டில் இல்லாத அளவுக்கு குயின்ஸ்லாந்தில் தொற்று பாதிப்பு 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு முதல்கட்ட ஊரடங்கானது போதவில்லை” என்று குயின்ஸ்லாந்து மாநில துணை முதல்வர் ஸ்டீவன் கூறியுள்ளார். ஆனால் மற்ற நாடுகளை விட ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. இதற்காக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கையாண்ட விதம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.