கட்டணத்தைச் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு 30 பேர் பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அரசு பூங்காக்களை காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடை பயிற்சிக்காக திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கட்டணமில்லாமல் நடைபயிற்சி செய்து வந்தவர்கள் தற்போது ஒரு மாதத்திற்கு 200 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 100 பேர் மட்டுமே அரசு பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனையடுத்து முதல் நாளான நேற்று 30 பேர் அனுமதி சீட்டை வைத்து பூங்காக்களில் நடைபயிற்சி செய்துள்ளனர். மேலும் அனுமதி சீட்டு இல்லாதவர்களை மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தனர். அதோடு பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் முககவசம் அணிந்தவாறு, சமூக இடைவெளியை கடைபிடித்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.