பிரிட்டனில் கொரோனாவின் நான்காம் அலையை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனா அதிகம் பரவியதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. எனவே இன்னும் சிறிது நாட்களில் கொரோனா விதிமுறைகளும் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனாவின் நான்காம் அலையில் மாட்டாமல் இருப்பதற்கு கொரோனா சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உணவகங்கள், பப்புகளுக்கு செல்ல முடியும் என்ற திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
இதனால் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள். எனவே அரசின் இலக்கை அடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த விதி கட்டாயம் இல்லை. எனினும் இலையுதிர் காலம் அல்லது குளிர்காலத்தில் நாடு கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டால் இந்த விதி கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டம் கொண்டுவரப்படும் பட்சத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத பகுதிகளில் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமென்ற விதியானது இலையுதிர்காலத்தில் முக்கியமானதாக மாறும் என்று தெரிவித்திருக்கிறது.
தற்போதுவரை, நாட்டில் 30 லிருந்து 34 வயதுக்குட்பட்ட மக்களில் 75% பேரும் 50 வயதிற்கு வயதுக்கு அதிகமான நபர்களில் 95% பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.