ஸ்விட்சர்லாந்தில் இந்த மாதத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகள் உட்பட பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது.
ஸ்விட்சர்லாந்தில் இம்மாதம் முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத மக்கள் 50 சுவிஸ் பிராங்குகள் கட்டணம் செலுத்தி தான் பரிசோதனை மேற்கொள்ள முடியும். இந்த விதியானது, வரும் 10-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும், 31-ஆம் தேதியிலிருந்து நாட்டில், கடிகாரம் 1 மணி நேரம் பின்னோக்கி நகர்த்தப்படுகிறது. அதாவது சூரியன், உதயமாவதும், அஸ்தமனமாவதும் 1 மணி நேரம் முன்பே கணக்கிடப்படவுள்ளது. மேலும், பிரிட்டன் செல்லும் ஸ்விஸ் பயணிகளுக்காக புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சுவிட்சர்லாந்தை பிரிட்டன், பச்சை பட்டியலில் வைத்திருக்கிறது. அதாவது குறைவான ஆபத்து கொண்ட நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. இன்றிலிருந்து, சுவிட்சர்லாந்தின் வாழிட உரிமம் பெற்ற மக்கள், பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள விதிமுறைகள் மாற்றப்படவுள்ளது. எனவே, பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளும், முன்பு மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பிரிட்டன் சென்ற பின்பு, இரண்டாவதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.