Categories
உலக செய்திகள்

பயணப் பட்டியலில் புதிய பிரிவுகள்… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவில் புதிய பிரிவுகள் தற்போதைய பயணப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அம்பர் பிளஸ் மற்றும் பச்சை கண்காணிப்பு உள்ளிட்ட பிரிவுகளை புதிதாக பயணப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் மொத்தம் பயணப் பட்டியலில் பச்சை கண்காணிப்பு, பச்சை, அம்பர் பிளஸ், அம்பர், சிவப்பு, அம்பர் கண்காணிப்பு ஆகியவை உள்ளது.

அதில் பச்சை கண்காணிப்பு பட்டியல் பச்சை பட்டியலிலிருந்து அம்பர் நகரும் அபாயத்தில் உள்ள நாடுகளை அடையாளம் காட்டுவதாகவும், அம்பர் கண்காணிப்பு பட்டியல் அம்பர் பட்டியலில் இருந்து சிவப்பு பட்டியலுக்கு நகரும் நாடுகளை அடையாளம் காண்பதற்கும் உள்ளது.

இதையடுத்து பச்சை பட்டியல் பிரித்தானியாவிற்கு வருபவர்களுக்கு சோதனை மேற்கொள்ளும் போது தொற்று உறுதியானால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்பதையும், அம்பர் பட்டியல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவிற்கு வருபவர்கள் தடுப்பூசிகளை முழுமையாக போட்டிருந்தால் தனிமைப்படுத்துதல் என்பது அவசியமில்லை.

அதுவே மற்ற நாடுகளிலிருந்து வந்தால் பத்து நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் தொற்று இல்லை என்பது சோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும் என்பதை குறிக்கும். மேலும் அம்பர் பிளஸ் பட்டியலில் பிரான்ஸ் நாடு மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் படி பிரித்தானியா வரும் பயணிகள் தடுப்பூசிகளை முழுமையாக போட்டிருந்தாலும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது ஆகும். சிவப்பு பட்டியலில் உள்ளவர்கள் பிரித்தானியாவிற்கு வரும்போது பத்து நாட்கள் சொந்த செலவில் ஹோட்டலில் தனிமைப்படுத்த வேண்டும். தொற்று பாதிப்பு இல்லை என்பதை சோதனையின் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Categories

Tech |