துணைமுதல்வரின் இளைய மகன் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டார். இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் திடீரென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, “கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறும் சசிகலா பூரண குணமடைந்து வரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று, அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இது அரசியல் அல்ல, என் மனதில் தோன்றிய பதில்” என்று குறிப்பிட்டுள்ளார்.