விஜய் தொலைக்காட்சியில் புதியதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் வித்தியாசமான சில தொடர்கள் மற்றும் விருவிருப்பான தொடர்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொலைக்காட்சியில் புதியதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி ”சிப்பிக்குள் முத்து” என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.