பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான சன் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரைகளின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகையால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியல்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில சேனல்களின் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முந்தையை எபிசோடுகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் புதிதாக ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மே 29-ஆம் தேதி முதல் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9;30 மணி அளவில் ‘ஜோதி’ என்கின்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.