பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ”லாக்கப்” என்கிற புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதில் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக புதிதாக ”லாக்கப்” என்கிற புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியை பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் அறிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் பிரபல நடிகை கங்கனா ரனாவத் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் போட்டியாளர்களாக வருபவர்கள் 72 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவர். விரைவில் இந்த நிகழ்ச்சி OTT தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.