Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேகத் தடையே வேண்டாம்… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்… பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்…!!

வேகத் தடையை நீக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் தெற்குவெளிக்கு செல்லும் சாலையில் புதிதாக வேகத்தடை ஒன்று அமைக்கபட்டுள்ளது. இதில் வேகத்தடையில் ஒளிரும் விளக்குகள் இல்லை வர்ணமும் பூச படவில்லை. இந்த வழியாக நாகூர் தர்கா, சிங்காரவேலர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம் ஆகிய பகுதிகளுக்கு கார், இருசக்கர வாகனம், சரக்கு வாகனங்கள் ஆகியவை அதிக அளவில் செல்வதால் கடந்தவாரம் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இந்த வேகத்தடையில்  விழுந்து காயம் அடைந்துள்ளனர்.

அதனால் இந்த வேகத்தடையை நீக்க கோரி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் வேகத்தடையை அகற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாகவும் காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் நாகை-திருவாரூர் நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |