தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் புதிய புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க கன்னியாகுமரி மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும். டிசம்பர் 1ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கூட வங்கக்கடலில் உருவாக்கிய நிவர் புயல் புதுச்சேரி பகுதியில் கரையை கடந்தது. புதுச்சேரி பகுதியில் கரையை கடந்த நிவர் புயலால் தமிழகத்துக்கு பெருமளவில் சேதம் ஏற்படவில்லை என்றாலும் கூட, மழை அதிகம் அளவே கிடைத்தது. சென்னையில் தாழ்வான பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. சென்னை குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் உரிய அளவை எட்டின. இதனால் வருகின்ற காலங்களில் குடிநீர் பஞ்சம் இருக்காது என்று சொல்லும் அளவிற்கு நிவர் புயல் மழையை கொடுத்திருந்தது. இந்த நிலையில் அடுத்து ஒரு புயல் உருவாக இருப்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.