அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது இன்று புயலாக வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் மேற்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் எனவும் சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மீனவர்கள் அந்தமான் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது என்று மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.