Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தமிழகம் , பாமக இருவருக்கும் ஸ்வாகா ….. இடியாப்ப சிக்கலில் அதிமுக ….!!

கோரிக்கையை அதிமுக நிறவேற்ற தயங்குவதால் பாமக கூட்டணியை விட்டு விலகுவது உறுதியாகியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் வெற்றி பெறவில்லை .

திமுக தலைமையிலான கூட்டணி புதுச்சேரி சேர்த்து 39 இடங்களில் அசுரத்தனமான வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலையும் கூட்டணி சந்திக்கின்றது. இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.இதை தொடர்ந்து இன்று தீடிர் திருப்பமாக செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி தனது இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால், அதிமுக கூட்டணிக்கு இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். இது அதிமுக தரப்பிற்கு பெறும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பத்து கோரிக்கைகளை முன்வைத்தது பாமக வைத்த பத்துக்கோரிக்கைகளில் ஒன்றைக் கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதால், டாக்டர். ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரடியாகச் சந்தித்து மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவும் தனது முடிவை விலக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாமக முன்வைத்த 10 கோரிக்கைகள் : 

காவிரி டெல்டாப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் இருபது பாசனத் திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும்.

கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

காவிரியில் மேகதாது அணைகட்ட தடைவிதிக்க வேண்டும்.

வேளாண் கடன்கள் அனைத்தும் தடை செய்திட வேண்டும்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும்.மேற்கண்ட பத்து கோரிக்கைகளை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்தது.

அதிமுக_வுடன் பாமக கூட்டணி அமைத்தபோது அக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்களிடையே பல்வேறு அதிருப்தி எழுந்தது. அக்கட்சி நிர்வாகிகள் பாமகவில் இருந்து விலகினர் . #மண்டியிட்ட மாங்கா” என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகியது. அதிமுகவுடன் 10 கோரிக்கையை முன்வைத்தே கூட்டணி என்று அக்கட்சி நிர்வாகிகள் நியப்படுத்திய நிலையில் தற்போது 2 கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால் கூட்டணி இல்லை என்று புதிய தமிழகம் அறிவித்து விட்டது.

புதிய தமிழகம் கட்சியின் இந்த அறிவிப்பு அந்த கட்சி தொண்டர்களின் ஆதரவை தக்க வைக்க உதவும் . அதே நேரத்தில் 10 கோரிக்கையில் ஒன்றை கூட நிறைவேற்றாமல் உள்ள அதிமுக கூட்டணி குறித்து பாமக தொண்டர்களை பேச வைக்கும். 2 கோரிக்கைக்காக வெளியேறிய புதிய தமிழகம் கட்சியின் முடிவை பாமக தொண்டர்கள் நியாயப்படுத்தி பேச தூண்டும். இதனால் பாமகவுக்கு அதிமுக கூட்டணியில் தொடர சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய தமிழகம் , பாமக இரண்டுமே ஜாதி அடிப்படையிலான வாக்குகளை கொண்ட கட்சிகள் . இதில் புதிய தமிழகம் 2 கோரிக்கை வைத்து அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. 10 கோரிக்கை வைத்த பாமக வெளியேறக்கூடாது என்று நினைத்து அதிமுக பாமக கோரிக்கையை நிறைவேற்றினால் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று தெய்வேந்திரகுல வேளாளர் சமூகம் அதிமுகவை புறக்கணிக்கும்.

அதே வேளையில் 2 கோரிக்கையை முன்வைத்து கூட்டணியை விட்டு வெளியேறிய புதிய தமிழகம் நடவடிக்கையை நியப்படுத்தி பாமக கோரிக்கை குறித்து அதிமுக_விற்கு அழுத்தம் கொடுக்க பாமக நிர்வாகிகள் விரும்புவார்கள். இதனால் அதிமுக இடியாப்ப சிக்கலில் மாற்றியுள்ளது. எப்படி பார்த்தலும் அதிமுக தனது சொந்த வாக்கு வாங்கிக்காக இருவரின் கோரிக்கையையும் நிறைவேற்ற போவதில்லை , இந்த கூட்டணியும் தொடரப்போவதில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் நடவடிக்கை அப்பட்டமாக காட்டுகின்றது.

Categories

Tech |