Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கண்டிப்பா மொய் வச்சிருங்க… வித்தியாசமான புது டெக்னிக்… ஆச்சர்யமூட்டும் திருமண நிகழ்ச்சி…!!

ஒரு திருமண விழாவில் வித்தியாசமாக செல்போன் செயலி மூலம் மொய் பணம் வசூலித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் மொய் எழுதும் பழக்கமானது மிகவும் விசேஷமான ஒன்றாகும். திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதுகுத்து போன்ற அனைத்து குடும்ப விழாக்களிலும் மொய் பணம் வசூலித்து அதனை நோட்டு போட்டு எழுதி, அவர்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு சென்று அந்த பணத்தை திரும்ப எழுதுவர். இந்நிலையில் மதுரை போன்ற மாவட்டங்களில் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பணத்தை நோட்டுப் போட்டு எழுதாமல், கம்ப்யூட்டர் மூலம் ரசீது வழங்கும் பழக்கமும் தற்போது உருவாகி விட்டது.

மேலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு எந்திரம் மூலமும் மொய் பணம் வசூலிக்கும் பழக்கமும் உருவாகிவிட்டது. இந்நிலையில் அனைவரும் பணத்தை செலுத்தும் வகையில் செயலி மூலம் மொய் பணம் வசூலிக்கும் ஒரு நிகழ்வு மதுரை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் செல்போன் செயலியின் மூலம் மொய் பணத்தை வசூலித்து உள்ளனர். இந்த திருமண விழாவில் மணமக்கள் இருவரும் தங்களது வங்கிக் கணக்கை செல்போன் செயலியுடன் இணைத்து  அதற்கான க்யூ ஆர் கோடு உருவாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த க்யூ ஆர் கோடை மொய்  எழுத வரும் இடத்திலும், தங்களது திருமண அழைப்பிதழிலும் ஓடி விட்டனர்.

இந்த வித்தியாசமான செயலானது அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தது. இச்சம்பவம் குறித்து அவர்கள் கூறும்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான உறவினர்கள் தற்போது நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்த்து விட்டனர். இதன் காரணமாகவே அவர்களின் வசதிக்காக டிஜிட்டல் முறையில் எளிதாக பணம் செலுத்த வேண்டும் என முடிவு செய்து இந்த நடைமுறையை உருவாக்கியுள்ளோம் எனவும், இது உறவினர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |