சிங்கப்பூரில் பொது இடங்களில் சோதனை பணியில் ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் தற்போது சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் சில ரோபோக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடங்கியுள்ளனர். அதன்படி, தற்போது சிங்கப்பூரில் ஒரு ரோபோ மக்கள் நடமாடக்கூடிய பகுதியில் சோதனை பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த ரோபோவிற்கு சேவியர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சேவியர் ரோபோ, மக்கள் பொது இடங்களில் சட்டத்தை மீறாமல் இருப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை மீறி செயல்படும் நபர்களை எச்சரிக்கக்கூடிய வகையில் சேவியர் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நாட்டில் ஹோம் டீம்ஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஏஜென்சி உருவாக்கிய ரோபோக்கள் அனைத்திலும் 7 கேமராக்களை பொருத்தியுள்ளனர். பொது வெளியில், வாகனங்களை சரியாக நிறுத்தாமல் செல்பவர்கள், புகைப்பிடிப்பவர்கள், மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் போன்றோரை கண்காணிக்கும் இந்த ரோபோ, அவர்களை எச்சரிக்கும்.
தற்போது, மக்கள் இந்த ரோபோக்களை ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள். இரண்டு ரோபோக்கள், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த பணியில் ஈடுபடுத்த சோதனை செய்யப்பட்டது. சோதனை வெற்றி பெற்றதால், நாடு முழுக்க ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியிருக்கிறது சிங்கப்பூர் அரசு.