பிரிட்டனில் வியட்நாமிருக்கு குடியேறிய 39 பேரின் சடலங்கள் குளிரூட்டப்பட்ட லாரியில் மறைத்து வைக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் உயிரிழப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
அயர்லாந்தை சேர்ந்த ஹோலியார் என்பவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஓல்ட் பெய்லி என்ற பழமைவாய்ந்த நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்றது. சென்ற வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்களின் சடலங்கள் தொழில்துறை தோட்டத்தில் லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த லாரி பெல்ஜிய துறைமுகமான ஜிப்ரூஜிலிருந்து கிளம்பியது ஆகும். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் போதிய அளவு ஆக்சிஜன் மற்றும் அளவுக்கு அதிகமான வெப்பம் ஆகியவற்றினால் 39 பேர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு இவ்வழக்கு தொடர்பான விசாரணையை 5 வாரத்தில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.