Categories
இந்திய சினிமா சினிமா

“அமிதாப்பச்சனை பற்றி கொரோனாக்கு தெரியாது” – நடிகர் மாதவன் …!!

அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் விரைவில் குணமடைய நடிகர் மாதவன் வித்யாசமாக ட்வீட் செய்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரின் மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரானோ என்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடையவேண்டுமென பாலிவுட், டோலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் பலர்பேர் டுவீட் செய்துள்ளனர். அவர்களில் நடிகர் மாதவன் டுவீட் சற்று வித்தியாசமாக இருந்தது. அமிதாப் யார் என்று தெரியாமல் அவரிடம் கோவிட் வைரஸ் சென்றுவிட்டது என்று பொருள்படும் விதத்தில் மாதவன் டுவீட் செய்துள்ளார்.

“ தவறான மனிதரிடம் கோவிட் தற்போது குழப்பம் அடைந்துள்ளது. அதன் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. அதை எப்படி முடிக்க முடிந்தது என்பதை அமித்ஜி நீங்கள்தான் வெளியுலகிற்கு காட்ட வேண்டும். யார் பாஸ் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டிய நேரம் இது. சீக்கிரம் நலம் பெற்று வாருங்கள். நான் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்,” என அமிதாப்பச்சனுக்கு  இவ்வாறு மாதவன் டுவீட் செய்துள்ளார். மேலும், “உங்களுக்கான மற்றுமொரு சவால் சகோரரே, இது உங்கள் நேரம், சீக்கிரம் குணமடைந்து வெற்றியைக் கொண்டாடுங்கள்,” எனவும் அவர் டுவீட்டில் .

Categories

Tech |