Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ஹரியானா அரசியலில் புதிய திருப்பம்” காங். இணைந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் …!!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளநிலையில் முக்கிய தலைவர்களில் ஒருவர் காங்கிரஸில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாகத் தயாராகிவருகிறது.இந்நிலையில், தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழலில் ஹரியானாவின் தற்போதைய எதிர்க்கட்சியாகவுள்ள இந்திய தேசிய லோக் தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரஞ்சீத் சிங் ரோரி அக்கட்சியைவிட்டு விலகினார்.

இன்று ஹரியானா காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் குமாரி செல்ஜா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். இது ஹரியானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சிர்சா தொகுதியிலிருந்து 2014ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.ஹரியானா காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அசோக் தன்வர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய சிறிது நாட்களில் சரஞ்சீத் சிங் காங்கிரஸில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |