கொரோனா பெருந்தொற்றை வலுவாக எதிர் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. விமான நிலையங்களில் உள்ள கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு உரிய அறிவுரை என நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு சுற்றைக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
மருத்துவ ஆக்சிஜன் உருளைகளை சீராக வழங்கங்குவதை உறுதிப்படுத்துமாறு மாநில மருத்துவத்துறை செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.