Categories
மாநில செய்திகள்

புதியவகை கொரோனா: மக்களே தைரியமா இருங்க… அரசு ரெடியா இருக்கு… முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள் பரிசோதனைகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கொண்டு வசதிகள் கூடுதலாக்கப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களை தமிழக செய்தி துறை சார்பாக தற்போது கொடுத்து இருக்கிறார்கள்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழிகாட்டக்கூடிய முறையில் கொரோனா பரிசோதனை செய்வோம். கோவிட் தொற்று மாதிரிகளை முழு மரபணு பரிசோதனை செய்யவும்,  நோய் பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும்,  அதிக நுரையீரல் தொற்று  ஆகிய நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கொரோனா பேரிடர் காண நிலையான வழிகாட்டல் படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள்ளரங்குகளில் சமூக இடைவெளியினை கண்டுபிடித்து,  நோய் தொற்று  தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனையை  அணுகி மருத்துவரை  ஆலோசித்து கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்ய அறிவுறுத்தி இருக்கிறார்.

சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் எவரேனும் கொரோனா, காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் இருந்தால் அவர்களுக்கு நிர்ணயான வழிகாட்டுதல் வழிமுறைகளை படி கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தி இருக்கிறார்.  பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும்,  மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது எனவும் முதல்வர் கூறி உள்ள.

Categories

Tech |