புதிய வகை வைரஸை தடுக்க இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டு என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக வீச தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் மீண்டும் ஊரடங்கிற்கு சென்றுள்ளது. தற்போது பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், அது முந்திய வைரஸை விட மிக வேகமாக பரவி வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எனவே பல்வேறு நாடுகள் பிரிட்டனின் விமானப் போக்குவரத்தை நிறுத்தி உள்ளன. மேலும் இந்த வைரஸ் தொடர்பாக விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் புதிய வைரசை தடுக்கும் முறைகளை உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
அதில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலமே இந்த புதிய வகை வைரஸ் பரவலை நம்மால் கட்டுபடுத்த முடியும் என்றும், வைரஸின் தன்மை தன்மை மாறகூடியது என்பதால் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளது. மேலும் பிரிட்டனின் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இருப்பினும் இந்த 70 சதவீதம் வரை வேகமாக பரவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் கவனம் அவசியம் என்று தெரிவித்துள்ளது.