‘துப்பறிவாளன் 2 ‘ படத்தின் அப்டேட்டை விஷால் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ திரைப்பட அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த படத்தை தானே இயக்க போவதாக விஷால் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் லண்டனில் துவங்குவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் எனவும், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Geared up for the Mega HUNT!!!
All set for the recce of #Thupparivaalan2 this #Jan2022 in #London.
Shoot to commence from #April2022.GB#Thupparivaalan2#Detective2#DirectionalDebut#ForeignCrew pic.twitter.com/VviuFFqAJi— Vishal (@VishalKOfficial) December 6, 2021