Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் புதிய அப்டேட்….. படக்குழு அறிவிப்பு….!!!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. சமந்தா மற்றும் நயன்தாரா இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, பிரபு, ஸ்ரீசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' பாடல் வெளியீட்டு தேதி  அறிவிப்பு | Vijay sethupathi kathuvakkula rendu kadhal second single  release date announcement | Puthiyathalaimurai ...

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் கர்நாடக திரையரங்கு உரிமையை ஏவி மீடியா கன்சல்டன்சி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |