தென்னாப்பிரிக்காவில் அதிக ஆபத்தான நியோகோவ் என்னும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது.
நியாகோவ் என்ற புதிய வைரஸானது, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு வேகமாக பரவும் தன்மை உடையது என்று சீனாவில் இருக்கும் வூஹான் நகரின் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த, நியாகோவ் வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் தான் ஒமிக்ரான் தொற்று முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் அது குறித்து அச்சம் ஏற்பட்டாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும், தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் தான், மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை ஒமிக்ரான் ஏற்படுத்தியதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது.