Categories
உலக செய்திகள்

புதிய வைரஸ்…. புதிய ஆபத்து…. புதிய பரபரப்பு….!!

உருமாறிய கொரோனா வைரஸ் இளம் வயதினர்களை அதிகமாக தாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனவிலிருந்தே இன்னும் உலகம் மீளாத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவியுள்ளதாகவும், அது மிகவும் வேகமாக பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வைரசானது தன்னுடைய தன்மையை மாற்றிக்கொண்டே இருக்கும் என்பதால் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரானா வைரஸ் இளம் வயதினர் மற்றும் குழந்தைகளை தாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுள்ள கொரோனா வைரஸ் ACE2 என்ற ஏற்பிகளை எளிதாக இணைத்து உயிரணுவிற்குள் செல்வதால் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |