புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பிரிட்டன் தவிர வேறு இடங்களிலும் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் பல பகுதிகளில் புதுவகையான கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார செயலர் matt hancock வெளியிட்டார். இந்த தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக இந்த புதிய வைரஸ் பிரிட்டனில் மட்டுமல்லாமல் வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்று டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளிலும் இதே வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பு அதிகரித்துள்ளது.
இந்த புதிய வைரஸ் ஏற்கனவே பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை விட வேகமாக பரவுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸ் ஸ்பெயினில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மூலமாக பிரிட்டன் வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த வைரஸ் அமைப்பு வித்தியாசமாக இருப்பதால் மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை அடையாளம் காண்பது கடினம் என்று கருதப்படுகிறது. எனவே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த புதிய வைரசுக்கு வேலை செய்யாமல் போகலாம் என்பது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.