தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் வாக்காளர்கள் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் போன்ற பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. தேர்தல் ஆணையமும் இதற்கான அனைத்து பணிகளிலும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதிதாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து இருப்பார்கள்.
இந்நிலையில் புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதுமாக உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்கள் பங்குபெற்று பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.