Categories
உலக செய்திகள்

ட்விட்டருக்கு பதிலாக இது…. அதிரடியாக உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம்…. மீண்டும் எழுந்து வரும் டிரம்ப்….!!

777 எழுத்துக்களை கொண்ட பதிவுகளை பதிவேற்றம் செய்யும் விதமாகவும், 3 நிமிட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் விதமாகவும் ட்ரம்ப் குழுவினர்கள் புதுவித சமூக வலைத்தள பக்கத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.

அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்தால் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் ட்ரம்பினுடைய இணையதள பக்கத்திற்கு நிரந்தரமாக தடை உத்தரவை விதித்துள்ளது.

இந்நிலையில் ட்ரம்பின் குழுவினர்கள் ட்விட்டருக்கு பதிலாக Getting Together ரின் சுருக்கமாக GETTR என்னும் புதுவித சமூக வலைத்தள பக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த GETTR பக்கத்தில் 777 எழுத்துக்களைக் கொண்ட பதிவுகளை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். மேலும் 3 நிமிட வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த GETTR இணையதள பக்கம் ட்விட்டருக்கு பதிலாக ட்ரம்பின் குழுவினர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த GETTR இணையதள பக்கத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விரைவில் தன்னுடைய அதிகாரப்பூர்வ ஆக்கவுண்ட்டை உருவாக்குவார் என்று தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |