Categories
உலக செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. அலறி அடித்து ஓடிய மக்கள்…. என்ன சத்தம்….? வைரலாகும் வீடியோ….!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திடீரென வெடித்த சத்தம் கேட்டு மக்கள் அலறி அடித்து சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்க நாட்டின் நியூ யார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சைரன் சத்தத்தை தொடர்ந்து பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பீதியில் தெரித்து ஓடினர். இந்த சத்தம்  டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள மேன்ஹோல்கள் பல வெடித்ததால் கேட்டுள்ளது. கேபிள் பழுதால் ஒரு மேன்ஹோல் வெடித்ததாகவும், இரண்டாவது மேன்ஹோல் தீப் பிடித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து மூன்று மேன்ஹோல்களில் ஏற்பட்ட தீயை அணைக்க மேற்கு 43வது தெரு மற்றும் 7வது அவென்யூவைச் சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டு தீயணைப்பு வீரர்கள் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

https://twitter.com/ss_shocks/status/1513320174853664768?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1513320174853664768%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Fmanhole-explosion-at-new-york-s-times-square-1649660965

இதற்கிடையில் தரைக்கு அடியில் உள்ள குழாய்கள், கம்பிகள் முதலியவற்றை ஆய்வு செய்வதற்காக மனிதர்கள் இரங்கு கூடியவாறு தெருவில் அமைக்கப்பட்டுள்ள மூடியுடன் கூடிய துளை என்பதுதான் மேன்ஹோல் எனப்படும்.

இந்த நிலையில் இணையதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் வெடிப்பு சத்தம் கேட்டதும் பயந்து போய் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடுவதை காட்டுகிறது.

Categories

Tech |