பிரான்ஸ் அரசு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட தடை அறிவித்திருக்கிறது.
பிரான்ஸ் பிரதமரான ஜீன் காஸ்டெக்ஸ், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, கொரோனாவின் ஐந்தாம் அலை அதிகமாக பரவி வருகிறது. மேலும் வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஒமிக்ரான் பரவலால், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
எனவே, விடுமுறை நாட்களில் பொது இடங்களில் புதுவருட கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கை போன்றவற்றிற்கு தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகமாக கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போதும் குறைவான அளவில் தான் குடும்பத்தினர் பொது இடங்களில் கூட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.