Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

புதுச்சேரியில் புத்தாண்டு…!களைக்கட்டும் கொண்டாட்டம்…! குவியும் சுற்றுலா பயணிகள்…!

புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால் அனைத்து சுற்றுலா தளங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது

புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் அங்கு உள்ள ரிசார்ட்டுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும், ஆட்டம் பாட்டம் என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிகின்றனர். ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலா தளங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனை அடுத்து ஊசுடு ஏரி, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, நோனான்குப்பம் படகு குழாம், கடற்கரை போன்ற அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் குவிந்தனர். மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நோனான்குப்பம் படகு குழாமில் படகு சவாரி செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் நகரத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்தில் உள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |