Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: சீறிப் பாய்ந்த வாகனங்களை விரட்டிப் பிடித்த காவல் துறை.!!

புத்தாண்டை முன்னிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், விபத்து ஏற்படுத்தும் வகையில் சீறிப் பாய்ந்த வாகனங்களை விரட்டிப் பிடித்தனர்.

சென்னையில் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்துகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் சட்டவிரோதமாக இருசக்கர வாகன பந்தயங்களைத் தடுக்கும்விதமாகவும் நகரெங்கும் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை நகரில் மிக முக்கியமான 300-க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன சோதனை நடத்தப்படும் எனக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சாலையில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களையும் மது அருந்தி ஓட்டுபவர்களையும் காவல் துறையினர் விரட்டிப் பிடித்தனர்.

மேலும், நகரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்யப்பட்டதாலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த மக்கள் வீடு திரும்பும்போதும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவற்றோடு 1 மணிக்கு மேல் நட்சத்திர விடுதிகளுக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது.

Categories

Tech |