ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் புத்தாண்டு கொண்டாடியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
உலக மக்கள் அனைவரும் 2021 புதிய வருடத்தை வரவேற்க தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் உலகிலேயே முதன்முறையாக நியூசிலாந்தில் புது வருடம் பிறந்தது. இதையடுத்து அங்கு மக்கள் கூட்டமாகக் கூடி கோஷம் எழுப்பி வானவெடிகள் வெடித்து புதுவருடத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இதையடுத்து உலக நேரக் கணக்கின்படி உலகிலேயே இரண்டாவதாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் உள்ள நிலையில் கே.எல் ராகுல் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் மயங்க் அகர்வால், பும்ரா உள்ளிட்ட வீரர்களும் உள்ளனர்.