சீனாவில் புத்தாண்டு இன்று தொடங்குவதால் மக்களுக்கு அதிபர் சி ஜின்பிங் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
சீனாவில் மிகப் பெரிதாக கொண்டாடப்படும் புத்தாண்டிற்காக அரசு அலுவலகங்களில் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் 12 மிருகங்களின் பெயரில் வருட பிறப்பை கொண்டாடுவார்கள். 12 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் அதே சுழற்சி ஆரம்பமாகும். அதன்படி நேற்றுடன் எருது வருடம் முடிவடைந்து, புலி வருடம் இன்றிலிருந்து தொடங்குகிறது. இந்த ஆண்டு பிறப்பு வசந்த விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்நாட்டின் கலாச்சாரத்தின் படி, புலி, வலிமை மற்றும் தைரியம் இரண்டையும் குறிக்கிறது. அதன்படி இந்த புதிய வருடம் துயரத்திலிருந்து மக்களை மீட்டு அமைதியை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வசந்த விழாவிற்காக உலக நாடுகளில் இருக்கும் லட்சக்கணக்கான சீன நாட்டு மக்கள், புது வருடத்தை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள்.
தற்போது கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. எனினும் பிற நாடுகளிலிருந்து சீனாவிற்கு செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.