அமேசான் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக விழாக்காலங்களில் அதிரடியாக சில பொருட்களுக்கு ஆஃபர்களை அள்ளி தரும்.
அந்த வகையில் 2021ஆம் ஆண்டில் எப்போது என்னென்ன சீசன் சேல்கள் நடைபெறவுள்ளது அதில் எதற்கு அதிக ஆஃபர் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
வாவ் சேலரி டே (புத்தாண்டு சேல்) ஜனவரி 1-3
ஒவ்வொரு மாதத்தின் முதல் 3 மூன்று நாட்கள் இந்த சேலரி டே சேல் நடைபெறும். இதில் டிவி, லேப்டாப், கணினி என அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 30 முதல் 40% வரை தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் வாங்கும் பொருட்களுக்கு வட்டியில்லாமல் தவணைகளும் வழங்கப்படும்.
நியூ இயர் பேண்ட்ரி சேல் (ஜனவரி 1 -7)
இந்த சேலில் வீட்டிற்கு தேவையான பலசரக்கு சாமான்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும். இதில் அனைத்து பலசரக்கு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
ஹோம் ஷாப்பிங் சேல் ஜனவரி 9 – 12
இந்த சேலில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 40% வரையும், மேலும் அன்றாட பராமரிப்பு பொருட்களுக்கு 45 % வரையும் தள்ளுபடி வழங்குகிறது.
பொங்கல் சேல் ஜனவரி 12-16
ஆடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். மேலும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இந்த சேலின் போது அமேசான் நிறுவனம் தள்ளுபடி விலையில் வழங்கும்.
அமேசான் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 23 – 26
கிராண்ட் கேமிங் டே ஜனவரி 27- 29
இந்த சேலின் போது கேமிங் கேட்ஜெட்டுகளுக்கு 50% வரை தள்ளுபடி கிடைக்கும்.
காதலர் தின சேல் பிப்ரவரி 10 – 14
இந்த சேலின் போது கிப்ட் போன்ற சாதனங்களுக்கு ஆஃபர்களை வழங்கும்.
எண்ட் ஆஃப் சீசன் சேல் பிப்ரவரி 21- 29
அனைத்துப் பொருட்களுக்கும் 70% தள்ளுபடி வழங்கப்படும். மேலும் அமேசான் பே முலம் பணம் செலுத்துபவர்களுக்கு கூடுதல் 10% தள்ளுபடி வழங்கும்.
ஃபேப் போன் ஃபெஸ்ட் பிப்ரவரி 26-29
ஸ்மார்ட் போன்களுக்கு 40% தள்ளுபடி வழங்கப்படும்.
ஸ்ப்ரிங் சம்மர் சேல் மார்ச் 5 – 8
இந்த சேலின் போது அனைத்து கிச்சனுக்குத் தேவையான பொருட்களுக்கு 60% தள்ளுபடியும், வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு 70% தள்ளுபடியும் வழங்கும்.
பேக் டு ஸ்கூல் சேல் 24 மார்ச் – 14 ஏப்ரல்
குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களுக்கு 70% தள்ளுபடி வழங்கப்படும்.
அமேசான் சம்மர் சேல் மே 4- 7
இந்த சேலின் போது பல்வேறு சாதனக்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கும். ஆடைகள், அலங்காரப் பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்து வகையான பொருட்களுக்கும் நல்ல சலுகைகள் கிடைக்கும்.