Categories
மாநில செய்திகள்

ரூ 10 இருந்தால் போதும்… சென்னையை சுற்றி பார்க்கலாம்… புத்தாண்டு ஸ்பெஷல்..!!

ஜனவரி 1ஆம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்களிடையே சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் 10 ரூபாய் கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா (எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் (01.01.2020) அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலா பொருட்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், ஆறுபடை முருகன் கோவில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்

காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இயக்கப்படுகிறது. இதற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செல்லதக்கதாகும். சுற்றுலா பயணிகளை ஓரிடத்திலிருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்து செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம் எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |